வெளிமாநிலங்களில் இருந்து நடந்தே வரும் தொழிலாளர்கள்! பாதுகாப்பாக அழைத்து வருமாறு அதிகாரிகளுக்கு யோகி அதிதிநாத் உத்தரவு!
வெளிமாநிலங்களில் இருந்து நடந்தே வரும் தொழிலாளர்களை, பாதுகாப்பாக அழைத்து வருமாறு அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வந்த மக்களால், மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து, உத்திரபிரதேசத்தில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, 172 தொழிலாளர்கள் நடைபயணமாக வந்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் புலந்த்சாகரில் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், ராஜஸ்தானில் இருந்து நடந்து வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை, பிரசோபாத்தில் தடுத்தியுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நடைபயணமாக வந்த இவர்களை, காவல்துறையினர் அருகில் உள்ள கல்லூரியில் தங்க வைத்துள்ளனர். மேலும், இவர்கள் தங்களது சொந்த ஊர்க்களுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து உத்திரப்பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத், தொழிலாளர்களை நடந்து வர விடாமல், அவர்களை பாதுகாப்பாக அழைத்து வர, ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.