இந்தியா

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் முடக்கம்..! தொழிலாளர்களின் நிலை என்ன..?

Published by
லீனா

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி  தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்  போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 13 நாட்களாக நடைபெற்று வருகிறது. 8 குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக உள்ள குழாயை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினமே இந்த சுரங்க பாதை தோண்டும் பணி முழுதாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது வரை சுரங்கம் தோண்டும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இயந்திரத்தில் மீண்டும் மீண்டும் கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இதனை சரி செய்து, அவர்களை மீட்கும் பணியில் அங்குள்ளவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில், 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர்கள் வெளியே வரும் வரை அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்றவை குழாய் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் மீட்பு பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் கண்காணித்து வருகிறார்.

Recent Posts

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

5 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

5 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

6 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

8 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

8 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

9 hours ago