ஒற்றுமையும், அமைதியும் நிறைந்த தேசத்தை இலட்சியமாகக் கொண்டு உழைத்த மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காந்தி ஜெயந்தியையொட்டி இன்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி, காந்தி ஜெயந்தியான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில், மகாத்மா காந்திக்கு தலை வணங்குகிறேன்.
மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது, அது ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒற்றுமை, இரக்க உணர்வை மேலும் வளர்க்க தூண்டுகிறது. எனவே, மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம். காந்தியின் எண்ணங்கள் நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கட்டும் என்றுள்ளார். மேலும், மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…