288 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாக 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 24-ம் தேதி நடைபெற உள்ளது.
ஒரு பக்கம் பாஜக, சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் , மற்றோரு பக்கம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பேசினார்.அப்போது அவர் ,மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என கூறினார்.
மேலும் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவால் நாடு அழிந்து விடும் என சிலர் கூறினர். ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் முடிவு எடுத்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. நாடு அழிந்து விட்டதா என மோடி கேள்வி எழுப்பினார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பண மோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது என மோடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…