‘வீட்டில் இருந்து பணிபுரியுங்கள்’ – டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் வேண்டுகோள்
வாகன மாசுபாட்டை குறைக்க முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்.
டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், வாகன மாசுபாட்டை குறைக்க முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.