அற்புதமான சந்திப்பு… கத்தார் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி!

pm modi

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் ஐக்கிய அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் சிறப்பான வரவேற்ப்பை கொடுத்து, ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

இதன்பின், அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இந்தியாவிற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, துபாயில் புதிய சிபிஎஸ்இ அலுவலகம் விரைவில் நிறுவப்படும் என அறிவித்தார். மேலும், ரூபே கார்டு மற்றும் யுபிஐ சேவை குறித்தும் பேசினார். இதையடுத்து, உலக அரசுகள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

துபாயில் புதிய சிபிஎஸ்இ அலுவலகம்… பிரதமர் மோடி அறிவிப்பு

அப்போது, குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பதே எனது மிகப்பெரிய கொள்கையாகும் என்றார். இதனைத்தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு கடந்த 2015ம் ஆண்டு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நேற்று அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் ஹிந்து கோவிலைத் திறந்து வைத்து பிரார்த்தனை செய்தார்.

இந்த நிலையில், ஐக்கிய அமீரகம் பயணத்தை முடித்துக்கொண்டு, கத்தார் தலைநகர் தோஹாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி பிரமாண்ட வரவேற்பு அளித்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா மற்றும் கத்தார் இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

எங்கள் அரசு மீது மக்கள் நம்பிக்கை அதிகரிப்பு… துபாயில் பிரதமர் மோடி பேச்சு!

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கத்தார் பிரதமர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடனான ஒரு அற்புதமான சந்திப்பு இருந்தது. நாங்கள் இந்தியா மற்றும் கத்தார் இடையிலான நட்புறவு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பேசினோம் என்றுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுபோன்று, இரு தலைவர்களும் மேற்கு ஆசியாவின் வளர்ச்சிகள் குறித்தும், அமைதி நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர் என கத்தார் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்