விரைவில் சென்னை விமான நிலையத்தில் மகளீர் சுயஉதவிக்குழு விற்பனை மையம்..!
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பெண்கள் இணைந்து செயல்பட கூடிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் அந்த குழுவை மேம்படுத்துவதற்கான நலத்திட்ட வசதிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
தற்போதும் அவ்சார் எனும் திட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில் சுய உதவிக்குழுவினருக்கான விற்பனை மையம் ஒன்று விரைவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையங்களில் சுய உதவிக் குழுவினருக்கு தனி இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விற்பனை மையத்திற்காக100 முதல் 200 சதுர அடி இடம் ஒதுக்கப்படுவதாகவும், இதில் விற்பனை மையம் அமைக்க விரும்பும் சுய உதவிக்குழுவினர் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் எனும் வெப்சைட்டில் https://www.aai.aero/en/node/add/shg-user-detail விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
திறன் பயிற்சிபெற்ற கைவினைஞர்களை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு உருவாக்கியுள்ள அவ்சார்(AVSAR) திட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில் சுயஉதவிக்குழுவினரின் விற்பனை மையம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது.
– பாரத பிரதமர் திரு.@narendramodi #PMModi pic.twitter.com/Jb9it1QypR
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) April 2, 2022