Categories: இந்தியா

மகளிர்தினம்: இந்திய விமானப்படையில் முதல்முறையாக போர்ப்பிரிவுக்கு தலைமை தாங்கும் பெண்.!

Published by
Muthu Kumar

இந்திய விமானப்படையில் முதல்முறையாக முன்னணி IAF போர் பிரிவுக்கு, பெண் அதிகாரி ஒருவர் தலைமை தாங்குகிறார்.

ஷாலிசா தாமி:                                                                                                      இன்று சர்வதேச மகளிர்தினம் உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் சாதிக்காத துறை இல்லை என்பதற்கு உதாரணமாக, இந்திய விமானப் படையின் முன்னணி போர்ப்பிரிவுக்கு, குரூப் கேப்டன் ஷாலிசா தாமி தலைமை ஏற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷாலிசா தாமி,  மேற்குத் துறை ஏவுகணைப் படைக்கு தலைமை தாங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Airforce23

முக்கியத்துவம்:                                                                                                  ஷாலிசா தாமிக்கு இந்த தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளதன் மூலம், போர் மற்றும் கட்டளைக்குரிய பணி நியமனங்களில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கும், அவர்களின் பங்கை விரிவுபடுத்துவதற்கும் இந்திய ஆயுதப்படைகளின் முயற்சியை தெரிவுபடுத்துகிறது.

இந்திய ஆயுதப் படைகளில், வான் பாதுகாப்புப் பிரிவுகள் வகிக்கும் முக்கியப் பங்கில் ஒரு பெண் அதிகாரி தேர்வு செய்யப்பட்டிருப்பது, பெண்களின் சாதனைகளுக்கான மற்றொரு மைல்கல் என்று விமான ஆற்றல் ஆய்வு மையத்தின் இயக்குநர், ஏர் மார்ஷல் அனில் சோப்ரா தெரிவித்தார்.

சாதனை:                                                                                                      சர்வதேச மகளிர் தினத்தை உலகம் கொண்டாடும் இந்த நாளில், இது இந்திய விமானப்படை வரலாற்றில் மகத்தான சாதனையாகக் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்திய ராணுவம் பாலின சமத்துவத்தை நோக்கி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன்படி இந்திய விமானப்படை, மற்றும் கடற்படையில் கருட் கமாண்டோ படை மற்றும் மரைன் கமாண்டோக்கள் தங்கள் சிறப்புப் படைப் பிரிவுகளில் பெண் அதிகாரிகளுக்கான பதவிகளை பூர்த்தி செய்யும் விதம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

மேலும் கடந்த பிப்ரவரியில் முதன்முறையாக ராணுவத்தில், மருத்துவப்பிரிவுகளை தாண்டி பெண் அதிகாரிகளை நியமிக்க தொடங்கியது. அவர்களில் சுமார் 50 பேர் இந்திய-சீன எல்லைப்பிரிவில் தலைமை தாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 hour ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

2 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

2 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

3 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

4 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

6 hours ago