மகளிர்தினம்: இந்திய விமானப்படையில் முதல்முறையாக போர்ப்பிரிவுக்கு தலைமை தாங்கும் பெண்.!
இந்திய விமானப்படையில் முதல்முறையாக முன்னணி IAF போர் பிரிவுக்கு, பெண் அதிகாரி ஒருவர் தலைமை தாங்குகிறார்.
ஷாலிசா தாமி: இன்று சர்வதேச மகளிர்தினம் உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் சாதிக்காத துறை இல்லை என்பதற்கு உதாரணமாக, இந்திய விமானப் படையின் முன்னணி போர்ப்பிரிவுக்கு, குரூப் கேப்டன் ஷாலிசா தாமி தலைமை ஏற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷாலிசா தாமி, மேற்குத் துறை ஏவுகணைப் படைக்கு தலைமை தாங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முக்கியத்துவம்: ஷாலிசா தாமிக்கு இந்த தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளதன் மூலம், போர் மற்றும் கட்டளைக்குரிய பணி நியமனங்களில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கும், அவர்களின் பங்கை விரிவுபடுத்துவதற்கும் இந்திய ஆயுதப்படைகளின் முயற்சியை தெரிவுபடுத்துகிறது.
இந்திய ஆயுதப் படைகளில், வான் பாதுகாப்புப் பிரிவுகள் வகிக்கும் முக்கியப் பங்கில் ஒரு பெண் அதிகாரி தேர்வு செய்யப்பட்டிருப்பது, பெண்களின் சாதனைகளுக்கான மற்றொரு மைல்கல் என்று விமான ஆற்றல் ஆய்வு மையத்தின் இயக்குநர், ஏர் மார்ஷல் அனில் சோப்ரா தெரிவித்தார்.
சாதனை: சர்வதேச மகளிர் தினத்தை உலகம் கொண்டாடும் இந்த நாளில், இது இந்திய விமானப்படை வரலாற்றில் மகத்தான சாதனையாகக் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்திய ராணுவம் பாலின சமத்துவத்தை நோக்கி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன்படி இந்திய விமானப்படை, மற்றும் கடற்படையில் கருட் கமாண்டோ படை மற்றும் மரைன் கமாண்டோக்கள் தங்கள் சிறப்புப் படைப் பிரிவுகளில் பெண் அதிகாரிகளுக்கான பதவிகளை பூர்த்தி செய்யும் விதம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
மேலும் கடந்த பிப்ரவரியில் முதன்முறையாக ராணுவத்தில், மருத்துவப்பிரிவுகளை தாண்டி பெண் அதிகாரிகளை நியமிக்க தொடங்கியது. அவர்களில் சுமார் 50 பேர் இந்திய-சீன எல்லைப்பிரிவில் தலைமை தாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Indian Air Force has selected Group Captain Shaliza Dhami to take over command of a frontline combat unit in the Western sector. pic.twitter.com/qb85HvLSil
— ANI (@ANI) March 7, 2023