மகளிர் தினம் 2023: ஒவ்வொரு பெண்ணும் நினைவில் கொள்ளவேண்டிய உறுதிமொழிகள்.!
மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நவீன யுகத்தில் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ளவேண்டிய உறுதிமொழிகள்…
மகளிர் தினம் மார்ச்-8: இந்த உலகில் பெண்கள் சாதிக்காத துறைகள் இல்லை என்றே சொல்லலாம், அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். கடின உலகில் ஆண்களுடன் போட்டி போட்டு பெண்களும் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அவர்களை பெருமை படுத்தும் வகையில் சர்வதேச மகளிர் தினம் வருடாவருடம் மார்ச் மாதம் 8 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
முக்கியத்துவம்: ஒவ்வொரு ஆண்டும், இந்த நாள் சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் என பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினம், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வகிக்கிறது.
பெண்கள் நம்பிக்கையின் துளி: வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்கள் சாம்பியன்கள், இருப்பினும் நாளின் ஒவ்வொரு நொடியும் நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும், தகுதியுடனும் உணர நீங்கள் தகுதியானவர். எனவே இந்த சர்வதேச மகளிர் தினமான 2023 இல் இந்த உறுதிமொழிகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நினைவில் கொள்ளுங்கள்.
உறுதிமொழிகள்:
- நான் உண்மையானவள், முழுமையானவள், சரியானவள். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியேதான் நானும்.
- எனது குரல் மற்றவர்களைப் போலவே முக்கியமானது.
- நான் நேற்று இருந்ததை விட வலிமையானவள்.
- யாரும் என்போல் அல்ல, அதுவே எனது நம்பமுடியாத வலிமை.
- நான் என்னை எப்போதும் இரக்கத்துடன் நடத்துகிறேன்.
- எனது பாதுகாப்பு மண்டலத்திலிருந்து, வெளியே வந்து மகத்தான சாதனையை அடைய நான் தயாராக இருக்கிறேன்.
- எனக்கு எப்போதும் மகிழ்ச்சி தராத விஷயங்களுக்கு ‘இல்லை’ என்று சொல்ல எனக்கு அனுமதி உண்டு.
- நான் நினைத்த எதையும் செய்யும் வலிமையும் விருப்பமும் என்னிடம் உள்ளது.
- சவாலான சூழ்நிலைகளில் அதற்கான வழியை என்னால் கண்டுபிடிக்க முடிகிறது.
- நான் எப்போதும் வெற்றிக்கு தகுதியானவள்.