பிரதமர் நரேந்திர மோடி,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உலக மகளிர் தின வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடி,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உலக மகளிர் நாளையொட்டிக் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவிலும் உலகிலும் உள்ள அனைத்து மகளிருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் அவர்களின் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் தூண்டுகோலாக விளங்குவதாகவும், இந்தச் சமூகத்துக்கு நிலைத்தன்மையை அளிப்பவராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், இந்தியா பெண்களின் முன்னேற்றம் என்பதிலிருந்து பெண்களால் முன்னேற்றம் என்கிற நிலையை நோக்கி நகர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.