கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை பெண்களுக்கு உண்டு – கேரள உயர்நீதிமன்றம்!

Default Image

பெண்களுக்கு கருக்கலைப்பு சட்டப்படி தங்கள் கருவை கலைப்பதற்கு உரிமை உள்ளது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில், அவரது வயிற்றில் வளர்ந்து வரக்கூடிய சிசு குறைபாடு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து 22 வாரங்கள் வளர்ச்சியடைந்துள்ள இந்த சிசுவை கலைப்பதற்கு கேரள உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பார்வைத்திறன் குறைபாடு உள்ளதோடு அவரது இடது கால் செயலிழந்து நடக்க முடியாத நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்த கேரள உயர் நீதிமன்றம், கர்ப்பிணியின் வயிற்றில் வளரக்கூடிய 22 வார சிசுவுக்கு கிளைன்ஃபெல்டா் எனும் மரபணு கோளாறு உள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரைக் கொல்லும் அளவுக்கு இந்த குறைபாடு அபாயகரமானதாக இல்லாவிட்டாலும், குறைபாடு கொண்ட அந்த குழந்தை வளரும் போது அதன் தேவையைப் புரிந்து கொள்வதில் தாய்க்கு சிரமம் ஏற்படும்.

எனவே கருவை வைத்துக் கொள்வதா அல்லது கலைப்பதா என்பது குறித்து முடிவு செய்யக் கூடிய உரிமை பெண்களுக்கு உள்ளது எனவும், கருக்கலைப்பு சட்டப்படி குறிப்பிட்ட வாரத்தில் வயிற்றில் வளரக்கூடிய சிசுவை கலைப்பதற்கு தாயாருக்கு உரிமை உள்ளது எனவும், வயிற்றில் வளர கூடிய சிசு குறைபாடுடன் இருந்தால் அதை கலைப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கோரியிருந்தபடி அந்த பெண்ணின் வயிற்றில் வளர கூடிய 22 வார கருவை கலைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்