மசூதிக்குள் பெண்கள் நுழைய வழக்கு ..! மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் -உச்ச நீதிமன்றம்..!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் சென்று வழிபட உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு பெண்கள் செல்ல கேரளா அரசும் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் மசூதிக்குள் நுழைய அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் யாஸ்மீன் சுபெர் அஹமது என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இவரின் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அமர்விற்கு வந்தது. இதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்திற்கும் பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.