இந்தியாவில் கொரோனாவால் ஆண்களை விட பெண்களே இறக்க வாய்ப்பு அதிகம் – அதிர்ச்சி தகவல்.!

Published by
murugan

இந்தியாவில் கொரோனா இறப்புக்கு ஆண்களை விட, பெண்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகளவில் பெண்களை விட ஆண்கள் கொரோனாவால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா இறப்புக்கு ஆண்களை விட, பெண்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிகரிக்கும் பெண்களின் இறப்பு:

டெல்லியில் உள்ள பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அபிஷேக் குமார் உள்ளிட்ட விஞ்ஞானிகள், இந்தியாவில் வயது மற்றும் பாலின குறிப்பிட்ட கொரோனா இறப்பு விகிதத்திற்கான ஆய்வை மேற்கொண்டனர்.

Journal of Global Health Science என்ற அமைப்பின் தலைமையில் இந்தியாவில்  கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு விகிதத்தை வயது மற்றும் பாலின அடிப்படையில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது இதுவரை கொரோனாவால் இறந்தவர்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது . 

கடந்த மே 20-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 66 சதவீத ஆண்களும், 34 சதவீத பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனா தொற்று ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், வயதானவர்களுக்கும் (குறிப்பாக 70+ வயது) சமமாக பரவுகிறது என கூறப்படுகிறது.

இந்தியாவில் இறப்பு விகிதம் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளது என ஆய்வில் வெளியாகியுள்ளது. ஆண்களின் இறப்பு விகிதம் (உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையின் விகிதம்) 2.9 சதவீதமாக உள்ளது, ஆனால் பெண்களின் இறப்பு விகிதம் இது 3.3 சதவீதமாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) உலக மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3.34 சதவீதம் இருக்கும்  என தெரிவித்தது. ஆனால், இது தற்பொழுது  4.8 சதவீதமாக இருக்கக்கூடும் என  ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. வயதான ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும் , நோய்த்தொற்று ஏற்படும்போது சிறப்பு கவனம் தேவை என்றும் ஆய்வு கூறுகிறது.

 

 

 

 

Published by
murugan

Recent Posts

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

13 minutes ago

பீஸ்ட் மோடில் குஜராத்தை வெளுத்த பூரன்… 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!

லக்னோ :  இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…

42 minutes ago

மாநகரம் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? புகைப்படங்களை பார்த்து நொந்து போன ரசிகர்கள்!

நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…

1 hour ago

பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை புகழாரம்!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…

2 hours ago

“பத்திகிச்சு இரு ராட்ச்சஸ் திரி”! துவைத்தெடுத்த கில் – சாய்! லக்னோவுக்கு இது தான் டார்கெட் !

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.   இந்த போட்டியில்…

3 hours ago

அதிமுக – பாஜக கூட்டணியின் தலைமை யார்? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…

4 hours ago