இனியும் பெண்களை புறக்கணிக்க முடியாது- நிர்மலா சீதாராமன்

Published by
Muthu Kumar

இனியும் உயர் பதவிகளில் பெண்களை புறக்கணிக்க முடியாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேலும் அவர் நேற்று மும்பையில் நடந்த பெண் இயக்குனர்கள் மாநாட்டில் கூறியதாவது, நாங்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம வாய்ப்பு தாருங்கள் என்று கேட்க வில்லை, உங்களுக்கு அதிக லாபம் வேண்டுமென்றால் பெண்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

பெண்கள் தலைமைப் பதவி வகிக்கும் பல நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டியுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

பெரிய நிறுவனங்கள் பலவும் தங்கள் வாரியங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குனராவது இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் இருக்கின்றன. இதனால்  பெண் இயக்குனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், பொதுத்துறை வங்கிகள் உட்பட பல நிறுவனங்களில் இன்னும் ஒரு பெண் இயக்குனர் கூட இல்லை என்பதை  அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர், சில நிறுவனங்கள் பெண்களை வாரியத்தின் இயக்குனர் பதவியில் வைப்பது தொடர்பான விதிமுறைகளை மீறுபவர்கள் கண்காணிப்பில் உள்ளனர் என்றும் எச்சரித்துள்ளார்.

அரசாங்கம் இதற்கான அழுத்தம் தர முடியாது கார்பரேட் நிறுவனங்கள் தான் பெண்களுக்கு முன்னுரிமை தர அழுத்தம் வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது ஆண்களுக்கான வசதியான இடமாக இருக்க விடக்கூடாது, பெண்கள் தான் துணிந்து முன்னேற வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Recent Posts

மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம்! கூடுதலாக 90 ராணுவ அமைப்புகள் குவிப்பு!

இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…

32 seconds ago
10, 12ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு எப்போது? முழு விவரம் இதோ…

10, 12ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு எப்போது? முழு விவரம் இதோ…

சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  முதலில்…

36 minutes ago

மாணவர்களுக்கு குட் நியூஸ்! தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…

57 minutes ago

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

10 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

12 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

12 hours ago