#Breaking : சபரிமலையில் பெண்கள் அனுமதி வாபஸ்.! கேரள தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு.!

Default Image

10 வயது முதல் 50 வயத்துக்குட்பட்ட பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கபடுவதில்லை என்ற நடைமுறைதான் தற்போதும் தொடரும். – கேரள தேவசம் போர்டு.

2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டது போல கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட பெண்கள் அனுமதிக்கப்படுவர் என கேரள தேவசம் போர்டு அண்மையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஐயப்ப பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்ப்பை உண்டாக்கியது. இந்நிலையில் தற்போது, கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டு குறிப்பிடுகையில், அந்த வழிகாட்டு நெறிமுறை தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது.

அதில் அனைத்து வயதினரும் சபரிமலையில் அனுமதிக்கப்படலாம் என்று தான் குறிப்பிடபட்டு இருந்தது. அது தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆதலால். ஏற்கனவே உள்ள 10 வயது முதல் 50 வயத்துக்குட்பட்ட பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கபடுவதில்லை என்ற நடைமுறைதான் தற்போதும் தொடரும் என கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்