கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரன் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் ஆவார்.இவரது மனைவி ரூபஸ்ரீ ஆவார்.இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த 16-ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்றவர் திரும்ப வீடு திரும்பவில்லை.இதனால் கணவரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியுள்ளனர்.எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மஞ்சேஸ்வரம் கடற்கரையில் நிர்வானமான நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் காணாமல் போன ரூபஸ்ரீ என்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் அவரது தலைமுடி அறுக்கப்பட்ட நிலையில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இருந்துள்ளது.பின்னர் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், ரூபஸ்ரீயின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போது ரூபஸ்ரீ ,கடைசியாக வெங்கடராமன் என்பவரிடம் பேசியது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து வேங்கட்ராமனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது அவர் வேலைக்கு சேர்ந்த வருடத்தில் தான் ரூபஸ்ரீயும் வேலைக்கு சேர்ந்துள்ளதால் நட்பாக பழகியதாக கூறியுள்ளார்.
மேலும் ஒரே பள்ளி என்பதால் அவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும் அதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரூபஸ்ரீயை சந்தித்து அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும் சம்பவத்தன்று ரூபஸ்ரீ வீட்டுக்கு சென்றதாவும் கூறியுள்ளார்.
பின்னர் அவருடன் தகராறில் ஈடுபட்ட போது அவரை பக்கெட்டில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாகவும் பின்னர் அவரது சடலத்தை காரில் எடுத்து சென்று கடலில் வீசியதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் வெங்கட்ராமணிடம் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…