உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்த நபர் மீது மை ஊற்றிய பெண் தொண்டர் .!
- டெல்லி ஜாமியா மாணவர்கள் போலீசார் நடத்திய தடியடி சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறினார்.
- உத்தவ் தாக்கரேக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது மை ஊற்றினார்.
மஹாராஷ்டிராவில் தற்போது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி அமைத்துவருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமியா மாணவர்கள் போலீசார் நடத்திய தடியடி சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறினார்.
இதை தொடர்ந்து கடந்த 19ம் தேதி ஹிராமனி திவாரி என்ற வாலிபர் “ராகுல் திவாரி” என்ற பெயரில் உள்ள முகநூலில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் உத்தவ் தாக்கரேயை விமா்சித்து கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு வந்ததை மிரட்டல்கள் தொடர்ந்து அந்த பதிவை முகநூலில் இருந்து நீக்கினார்.
பின்னர் சிவசேனாவினர் ஹிராமனி திவாரியின் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி , அவருக்கு மொட்டை அடித்து உள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிவசேனாவின் பெண் தொண்டர் ஒருவர், உத்தவ் தாக்கரேக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது மை ஊற்றினார். ஆனால் அந்த நபரோ அதை கண்டு கொள்ளமல் யாருடனோ போனில் பேசி கொண்டு இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.