மகாராஷ்டிராவில் நடந்த கட்டிட விபத்தில் சிக்கிய பெண்ணை சுமார் 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலைநகர் மும்பை அருகே ராஜ்காட் மாவட்டம் மகாட், காஜல்ப்புரா எனும் பகுதியில் தாரிக் கார்டன் எனும் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் திங்கள்கிழமை அன்று கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.
விபத்து நடந்த சில மணி நேரங்களிலையே தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைவாக அப்பகுதி மக்களுடன் இணைந்து கட்டிட இடிப்பாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர் இந்த கட்டிட விபத்தில் 7 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கட்டிட இடிப்பாடுகளில் சிக்கிய மெஹ்ருனிசா அப்துல் ஹமீத் என்ற பெண்மணியை 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர் மீட்புப் படையினர். மணி மற்றும் தூசிகளால் மூடப்பட்டிருந்து சிறு துளையில் சிக்கியிருந்த அவரை மீட்பு படையினர் கடுமையாக போராடி மீட்டெடுத்து சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார் . நேற்று இந்த விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த கட்டிட விபத்தில் சிக்கிய 78 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…