ரூ.3 லட்சம் மதிப்பிலான நகையை குப்பையில் தூக்கி எறிந்த பெண்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
பண்டிகை நாட்களில் நம் வீட்டை சுத்தம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஒரு பெண் ஒருவர் வீட்டு சுத்தம் செய்வதாகக் கூறி, ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை குப்பையில் வீசி உள்ளார். புனேவில், பிம்பிள் சௌதாகர், என்ற பகுதியில் வசித்து வரும் ரேகா என்னும் பெண், தீபாவளியை முன்னிட்டு, தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த பழைய பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே வீசும் போது, நீண்ட நாட்களாக வைத்திருந்த ஒரு பழைய ஹேண்ட் பேக்கை தூக்கி வீசி இருக்கிறார். வீசி 2 மணி நேரத்திற்குப் பின்பு தான், ஆண்டாண்டு காலமாக பாதுகாத்து வைத்திருந்த மாங்கல்யம், வெள்ளி கொலுசு உட்பட மூன்று லட்சம் மதிப்பிலான நகைகளை அந்தப் பையில் வைத்து இருந்தது அவருக்கு ஞாபகம் வந்துள்ளது.
உடனே சஞ்சய் குட்டே என்ற உள்ளூர் சமூக சேவகரை தொடர்பு கொண்டுள்ளார். உடனே அவர் சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், உடனடியாக குடும்பத்தினர் குப்பை கிடங்கிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த ஊழியர்கள் குப்பைகளை சுமந்து சென்ற வாகனத்தை சோதனையிட்ட சென்றபோதுதான் அனைத்து குப்பைகளையும் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சுகாதாரத்துறையினர் கொடுத்த தகவலையடுத்து டெப்போவின் தரவு ஆய்வாளர் எந்த கிடங்கில் இருக்கும் என தோராயமாகக் கூறியிருக்கிறார். அவர் கூறியபடி தேடிப்பார்த்த போது கடைசியாக நகை கிடைத்துள்ளது. இதனையடுத்து, ரேகாவின் குடும்பம் சுகாதாரத்துறைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.