உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிகவும் பரிதாபமான முறையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். அப்பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது இவர்கள் சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, ஹத்ராஸ் கிராமம் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திப்பதில் இருந்து பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் மக்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் கோபத்தை தூண்டி விடுவதாக உள்ளது. கிராமத்திற்குச் செல்லும் பாதைகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து, வெளியாட்கள் கிராமத்திற்குள் வர தடை விதித்துள்ளனர்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…