150 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக இந்தியாவில் பெண்ணுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு!

Default Image

இந்தியா சுதந்திரம் அடைந்து 150 ஆண்டுகளில் இதுவரை எந்த ஒரு பெண்ணுக்கும் தூக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை, ஆனால் முதன்முறையாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அம்ரோகா மாவட்டத்தில் பவன்கேதா எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய பள்ளி ஆசிரியரான சவுகத் அலி என்பவரின் மகள்தான் ஷப்னம். வரலாறு மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பட்டதாரி ஷப்னம் கூலித்தொழிலாளி சலீம் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தனது கள்ளக்காதலனுடன் சலீம் உடன் சேர்ந்து ஷப்னம் அவரது தந்தை, தாய் அண்ணன் மகனான பத்து மாத கைக்குழந்தை உள்ளிட்ட தனது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்திருந்தார். இந்த வழக்கில் ஷப்னம் மற்றும் அவரது கள்ளக்காதலன் சலீம் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களிடம் இது குறித்து விசாரித்த பொழுது இவர்களின் கள்ளக்காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் இவ்வாறு செய்ததாக உண்மையை கூறியுள்ளனர்.

மேலும் குடும்பத்தினர் அனைவருக்கும் முதலில் விஷம் கலந்த உணவு கொடுத்து அவர்கள் மயக்கம் அடைந்த பின்பு கோடாரியால் ஒவ்வொருவரையும் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை செய்துள்ளார் ஷப்னம். தனது தாய் தந்தை என்று கூட பாராமல் கொலை செய்த ஷப்னம் மற்றும் அவரது கள்ளக்காதலன் சலீம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இவருக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு தற்பொழுது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவரது கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

அதுவும் தற்பொழுது நிராகரிக்கப்பட்டு, அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியிருக்கிறது. சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் முதல்முறையாக தூக்கு தண்டனை பெறப்போகும் பெண்மணி ஷப்னம் தான். 150 ஆண்டுகள் பழமையான மதுராவில் உள்ள சிறைச்சாலையில் தான் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறதாம். இன்னும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டாததால் சரியாக தூக்கிலிடப்படும் நாள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் தூக்குக் கயிறு பீகாரில் உள்ள பக்ஸர் மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப் பட்டு விட்டதாகவும் சிறைத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்