கொரோனா ஊரடங்கால் தனது நண்பர்களுக்கு ட்ரீட் வைக்க மறுத்த பெண்மணிக்கு வீட்டிறகு கேக் அனுப்பி வைத்து பாராட்டு தெரிவித்துள்ளனர் மும்பை காவல்துறையினர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை தவிர்ப்பதற்கு ஊரடங்கு மட்டுமே வழி என்ற அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு கடமையாக்கப்பட்டு பலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள பெண்மணி ஒருவரிடம் அவரது பிறந்தநாளுக்கு நண்பர்கள் ட்ரீட் கேட்டுள்ளனர். ஆனால் ஊரடங்கை காரணம் காட்டி வெளியில் செல்ல மறுத்த பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.
இதனை பார்த்த மும்பை காவல்துறையினர் அந்த பெண்ணை பாராட்ட நினைத்து அப்பெண்ணின் வீட்டிற்கே கேக் ஒன்றை அனுப்பி வைவைத்துள்ளனர். மேலும் பொறுப்புள்ள குடிமக்கள் நடந்து கொண்டதற்கு எங்கள் பாராட்டுக்கள் எனவும், உங்களது இன்றைய பாதுகாப்பான கொண்டாட்டம் நிச்சயமாக நாளைய மகிழ்ச்சியான உலகத்தை கொண்டுவர உதவும் எனவும் உங்களுக்கு மீண்டும் எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும் மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதோ அந்த பதிவு,
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…