கொரோனா சிகிச்சையின் போது ஆண் செவிலியரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரிழப்பு!
கொரோனா சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொழுது ஆண் செவிலியரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் அன்று மாலையே உயிரிழந்துள்ள சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்து வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் உயிரிழக்கின்றனர். இவை ஒருபுறமிருக்க மற்றொருபுறம் கடவுள்களாக நம்பி நோயாளிகள் மருத்துவர்களடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்காக பல மருத்துவர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து மக்களை காப்பாற்ற முன்கள பணியாளர்களாக பணியாற்றுகின்றனர்.
ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த 43 வயது பெண் ஒருவருக்கும் போபால் அரசு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வைத்து ஏப்ரல் 6-ஆம் தேதி 40 வயதாகும் சந்தோஷ் எனும் ஆண் செவிலியர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனையடுத்து மிகவும் மோசமான நிலைக்கு சென்ற அந்த பெண்மணி அன்று மாலையே உயிரிழந்துள்ளார். அப்பொழுதே இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தோஷம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்பொழுதுதான் நடந்த உண்மை புரிய வந்துள்ளது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண்மணி ஆன் செவிலியரால் பலாத்காரம் செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.