மோசடி செய்த பணத்தை பிரிப்பதில் கள்ளகாதலர்களுக்கு வந்த தகராறில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் உள்ள காஷ்மீரா என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய ஆஷீஷ் என்பவர் திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். சூரத்தை சேர்ந்த நிகிதா என்பவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர், ஆனால் இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆஷிஷுக்கும் நிகிதாவுக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கமாக ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் அது காதலாக மலர்ந்துள்ளது. இதனால் ஆஷீஷ் தன்னுடைய மனைவியை விட்டு விட்டு பிரிந்து வந்து நிகிதா உடன் வாழ்ந்துள்ளார். இருவருக்கும் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து கார்டு ஸ்வைப் மெஷின் பிசினஸ் ஒன்றை ஆரம்பித்து, தங்களின் கார்டுகளை ஸ்வைப் செய்து 15 லட்சத்திற்கும் மேல் பணம் எடுத்துள்ளதாக இவர்கள் மீது மோசடி புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து ஸ்வைப் மெஷின் கம்பெனியினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் அவர்களை தேடி வருவதை அறிந்து இருவருமே தலைமறைவாகி உள்ளனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் மோசடி செய்த பணத்தை பிரித்துக் கொள்வதில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இந்த சண்டை ஒரு கட்டத்தில் ஆஷீஷ்க்கு கோபத்தை அதிகரிக்க செய்யவே, நிகிதாவை அவர் அடித்துக் கொலை செய்து விட்டு, அவரே சடலத்தை புதைத்து விட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று உள்ளார். அதன்பின் நிகிதாவின் உறவினர்கள் அவரை காணவில்லை என்று தேடிக் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தியதில் நிகிதாவை ஆஷீஷ் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தற்பொழுது அவரை தேடிவருகின்றனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…