ஊரடங்கு விதிகளை மீறிய எம்.எல்.ஏ மகனை விசாரித்த பெண் காவலர் இடமாற்றம்!

Default Image

ஊரடங்கு விதிகளை மீறி கார் ஓட்டிய எம்.எல்.ஏ அவர்களின் மகனை மடக்கி பிடித்து விசாரித்த குஜராத் பெண் காவலர் இடம் மாற்றப்பட்டுள்ளார்.

குஜராத்தில் இல்ல வராச்சா சாலையில் எம்.எல்.ஏவும், சுகாதாரத் துறை அமைச்சருமான குமார் கானானி அவர்களின் மகன் பிரகாஷ் கானானி அவர்கள் கடந்த புதன்கிழமை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊரடங்கு விதிகளை மீறி காரில் மணிக்கணக்கில் சுற்றி திரிந்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில் அன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலரான சுனிதா யாதவ் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தி உள்ளார். அப்பொழுது பிரகாஷ் கானானி அவரது தந்தையான எம்எல்ஏ வை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நடந்த விவரங்களைக் கூறி சம்பவ இடத்திற்கு அவரை வரவழைத்துள்ளார்.

பின் அங்கு வந்த அவரது தந்தை பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பதிலளித்த அந்த பெண் காவலர் நான் உங்களுக்கு அடிமை இல்லை எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சுனிதா யாதவ் காவல் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபாகரனும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவத்திற்குப் பிறகு பெண் காவலர் சுனிதா உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்து இன்னும் பணிக்கும் திரும்பவில்லை எந்த தகவலும் இல்லை என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தன் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதோ அந்த சம்பவம் தொடர்பான வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்