ஹரியானாவில் கணவரால் கடந்த ஒரு வருடமாக கழிவறைக்குள்ளேயே பூட்டிவைக்கப்பட்ட பெண்!
ஹரியானாவில் கணவரால் கடந்த ஒரு வருடமாக கழிவறைக்குள்ளேயே பூட்டிவைக்கப்பட்ட பெண் மீட்பு.
ஹரியானா மாநிலத்திலுள்ள பானிப்பட் எனும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை கடந்த 1 ஆண்டுகளாக கழிவறையிலேயே பூட்டி வைத்துள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரிகள் ரஜினி குப்தா அவர்களுக்கு இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் அவரது தலைமையிலான குழுவினர் அவ்விடத்திற்கு விரைந்து சென்று கழிவறையில் பூட்டி வைக்கப்பட்டு இருந்த பெண்ணை மீட்டு உள்ளனர். நடப்பதற்கு கூட தெம்பில்லாமல் அந்த பெண் இருந்துள்ளார்கள்.
இது குறித்து விளக்கமளித்த ரஜினி குப்தா, ஒரு வருடத்திற்கு மேலாக பெண் பூட்டி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நாங்கள் சென்று பார்த்த பொழுது உண்மை என்பதை கண்டறிந்து அப்பெண்ணை மீட்டோம். பல நாள் சாப்பிடாமல் இருப்பதால் மிக மோசமான நிலையில் உள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறுகின்றனர், ஆனால் அது உண்மை அல்ல, எங்களிடம் அவள் நல்ல முறையில் தான் பேசுகிறார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.