Categories: இந்தியா

சபரிமலை செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர்…! மரக்கூட்டம் பகுதியில் எதிர்ப்பால் திரும்ப சென்றனர்…!

Published by
Venu

சபரிமலை செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளரும் அவரது வெளிநாட்டு தோழியும், மரக்கூட்டம் பகுதியில் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்ப சென்றனர்.
கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறுவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுவருகிறது.இந்நிலையில் இன்று கோயில் நடைதிறக்கும் நிலையில்,கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.அதேபோல் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
ஆனால் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களையும் வர விடாமல் போராட்டகாரர்கள் தடுத்தார்கள்.
Image result for sabarimala protest
 
அது மட்டும் அல்லாமல் சபரிமலையில் அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரின் காரை மறித்து போராட்டக்காரர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினார்கள்.
இன்றும் சபரிமலை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.இன்று நியூயார்க் டைம்ஸ் பெண் பத்திரிகையாளரும் அவரது வெளிநாட்டு தோழியும் சபரிமலை கோவிலுக்கு வழிபட சென்றனர்.ஆனால் சபரிமலை கோவிலில் ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பெண் பத்திரிகையாளர் செல்ல எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையுடன் ஐயப்ப பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளரும் அவரது வெளிநாட்டு தோழியும், மரக்கூட்டம் பகுதியில் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்ப சென்றனர்.

Published by
Venu

Recent Posts

ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…

16 mins ago

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.

சென்னை -ஐயப்பனுக்கு மட்டும்  ஏன் இருமுடி கட்டு  காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…

29 mins ago

இந்த 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

1 hour ago

டிச.3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.!

கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…

1 hour ago

“வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.. இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்!

சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…

2 hours ago