கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள ஹூலிமாவு பகுதியில் சுமார் 32 வயதுடைய பெண் ஒருவர் கடந்த வியாழன் கிழமை இரவு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தன் கணவருக்காக காத்திருந்துள்ளார்.
பின்னர் கணவர் வர தாமதமாகும் என்பதால் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றிடலாம் என எண்ணி அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை மறித்துள்ளார்.அப்போது ஆட்டோ ஓட்டுனர் அதிகமாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண் பக்கத்தில் உள்ள இடத்திற்கு இவ்வளவு பணமா என்று கூறி குறைக்குமாறு கேட்டுள்ளார்.இதன் அடிப்படையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் சரி ஏறிக் கொள்ளுங்கள் என ஆட்டோ ஓட்டுநர் கூறியுள்ளார்.சிறுது தூரம் சென்றதும் திடீரென ஒரு குறுக்கு சந்தில் அந்த ஓட்டுநர் ஆட்டோவை திரும்பியுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
ஆனால் அந்த ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தாத காரணத்தால் ஆட்டோவில் இருந்து குதித்து காயம் ஏற்பட்டுள்ளது.பின்னர் உடனே அந்த பெண் தனது கைபேசியை எடுத்து அந்த ஆட்டோவை வீடியோ எடுத்துள்ளார்.
இதனால் பயத்தில் அங்கிருந்து அந்த ஆட்டோ ஓட்டுநர் தப்பி சென்றுள்ளார்.பின்னர் தனது கணவருக்கும் காவல்துறைக்கும் அந்த பெண் போன் செய்து தகவலை கூறியுள்ளார்.இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு டினேசுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…