ஊரடங்கு காலத்திலும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போலிஸாருக்கு இலவச உணவு வழங்கும் பெண்…!

Published by
லீனா

ஊரடங்கு காலத்திலும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போலிஸாருக்கு இலவச உணவு வழங்கும் பெண். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பலரும் உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு பலர் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், புனேவில் அகன்ஷா சடேகர் என்ற பெண் தினசரி 7,000 பேருக்கு உணவுகளை இலவசமாய் வழங்கி வருகிறார். காஷிபாய் நவலே மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பயிற்சியாளராக அவரது சகோதரர் சோஹம் பணியாற்றி வருகிறார். இவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தான்  இந்த பணியை செய்வதாக தெரிவித்துள்ளார்.

சில சமயங்களில் அவரது சகோதரர் உணவை உட்கொள்வதற்கு பல சிரமங்களை எதிர் கொள்கிறார். இதனை பார்த்த இவர் 2020 நவம்பரிலிருந்து தினசரி டிபன் வழங்க முடிவு செய்தார். இவர் இலவசமாக உணவு வழங்குவது பிரபலமாக தெரியவந்த நிலையில், தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு டிபன்களை வழங்கி வந்தார்.

COVID-19 ஐ கட்டுப்படுத்த அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்திய போது, ட்வீட்டர் பக்கத்தில் ஒருவர் 12 மணி நேரமாக காத்திருந்து உணவு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார். கட்டுப்பாடுகள் காரணமாக அவரால் ஆன்லைன் மூலமாகவும்  உணவை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற பதிவினை பார்த்தார். இதனை பார்த்த அவர் அந்த நபருக்கு உதவி செய்துள்ளார்.

இவரது இந்த செயல் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலான நிலையில், பலரும் அகன்ஷா சடேகரிடம் தங்களது உணவு தேவையை குறித்து தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அகன்ஷாவின் வீட்டு சமையலறை மிகவும் சிறியதாக இருந்தது. எனவே கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட உணவகங்களை சிலவற்றை அணுகி அந்த உணவகங்கள் மூலமாக உணவுகளை தயார் செய்து வழங்கத் தொடங்கினார்.  உணவை வழங்கும் போது போலீசார் அவரை தடுத்து நிறுத்துவதுண்டு.

அவர்களிடம் தனது பணியை குறித்து கூறிவிட்டு, போலீசார் மூலமாகவே தெருவில் வசிப்போருக்கு உணவுகளை வழங்கி வந்தார். மேலும் தெருவில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் தங்களது பணி நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாத நிலையில் காணப்படும் காவல்துறையினருக்கும் உணவு பொட்டலங்களை வழங்க வழங்கியுள்ளார். பின் அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிட்டத்தட்ட 2500 பேருக்கு உணவு  வழங்குகின்றார்.

அகன்ஷா, தனது நண்பர்களான குஜராத்தைச் சேர்ந்த மாத்தூர் சர்மாவுடன் சமீபத்தில் புருஷோத்தம் மாலதி அறக்கட்டளையை அமைத்து, தொடர்ந்து அதிகரித்து வரும் உணவைப் பூர்த்தி செய்ய நன்கொடை திரட்டி வருகிறார். அதன்படி, ரூ.15 லட்சம் திரட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் அவர்கள் தொடர்ந்து இலவசமாக உணவை வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா
Tags: akanshaFood

Recent Posts

உண்டியலில் விழுந்த செல்போன் உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்படும்! -அமைச்சர் சேகர் பாபு

உண்டியலில் விழுந்த செல்போன் உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்படும்! -அமைச்சர் சேகர் பாபு

திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…

21 minutes ago

இது ‘தோழமைக்கு’ இலக்கணம் அல்ல! கே.பாலகிருஷ்ணன் பேச்சுக்கு முரசொலி கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…

42 minutes ago

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா…WTC ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா!

சிட்னி :  பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

1 hour ago

சென்னை மக்களின் கவனத்திற்கு: தாம்பரம் – கடற்கரை இடையே நாளை மின்சார ரயில் ரத்து… 40 பேருந்துகள் இயக்கம்!

சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…

13 hours ago

வீட்டில் நடந்த ரெய்டு: “வந்தாங்க.. ஒன்னுமில்லைன்னு போய்ட்டாங்”- அமைச்சர் துரைமுருகன்.!

சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…

14 hours ago

வன்கொடுமை விவகாரம்: ‘ஆதாரமற்ற செய்திகளை யாரும் பகிர வேண்டாம்’ – காவல்துறை அறிக்கை.!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…

14 hours ago