கர்நாடகா மாநிலத்தில் பல் மருத்துவனையில் குழந்தையை பிரசவித்த பெண்.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், மேலும் மே 3-ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் அவசர தேவைக்காக கர்ப்பிணிப் பெண்கள் ஆம்புலன்ஸ் கூட வராமல் அவதிப் படுகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் வாகனங்கள் ஏதும் கிடைக்காததால் பிரசவ வலியோடு பெண்ணொருவர் தனது கணவனுடன் மருத்துவமனையை நோக்கி 7 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்துள்ளார். ஆனால் அவரால் மருத்துவமனையை அடைய முடியவில்லை என்ற காரணத்தால், அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள பல் மருத்துவர் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பின்பு தாயையும் சேயையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து அவரது பிரசவம் பார்த்த மருத்துவர் ரம்யா அவர்கள் கூறுகையில், அந்தப் பெண் 5 முதல் 7 வரை நடந்து வந்திருப்பார். ஏதோ ஒரு நம்பிக்கையில் வந்துள்ளார். என்னுடைய மருத்துவமனை அருகே வரும் போது, அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு பிரசவம் பார்க்கப் பட்டு, குழந்தை பிறந்தது முதலில் குழந்தை அசைவற்று இருந்தது. இதனால் குழந்தை இறந்துவிட்டது என்று நினைத்தோம். பின் சற்று நேரத்தில் குழந்தை அசைந்தது. இப்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக கூறியுள்ளார்.
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…