கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் – பாஜக பிரமுகர் விஜய் திரிபாதி கட்சியிலிருந்து நீக்கம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் 20 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜெய்ப்பூர் மண்டல பாஜக தலைவர் விஜய் திரிபாதி கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் எனும் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷாதோல் மாவட்டத்தில் உள்ள 20 வயது இளம்பெண் ஒருவர் காணாமல் போனதை அடுத்து, அவரின் பெற்றோர்கள் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து காவல்துறையினர் விசாரித்ததில் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மூன்று பேர் தன்னை காரில் கடத்தி சென்று கிராமமொனறில் உள்ள பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, தனது வாயில் கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் ஜெய்ப்பூர் மண்டல பாஜக ஜெய்ப்பூர் மண்டலா தலைவர் விஜய் திரிபாதியும் இந்த கும்பலில் ஒருவர் என தெரியவந்தது.
மற்ற நான்கு பேரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ஜெய்ப்பூர் மண்டல தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விஜய் திரிபாதியை பாஜக நீக்கியுள்ளது. மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ஷாதோல் மாவட்ட பாஜக தலைவர் கமல் பிரதாப் சிங் அவர்கள், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்களுக்கு பாஜகவில் இடமில்லை எனவும், இது போன்ற குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், அதனால் தான் ஒழுங்கீனமான நடவடிக்கையில் ஈடுபட்ட விஜய் திரிபாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025