ஆதரவற்றவருக்கு சிறுநீரக தானம் செய்த பெண் – பிரதமர் மோடி பாராட்டு!

Default Image

ஆதரவற்ற ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்ததாக பெண்மணி ஒருவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, பிரதமர் மோடி அப்பெண்மணிக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

48 வயதுடைய மனோஷி ஹல்தார் எனும் பெண் கொல்கத்தாவில் வாழ்ந்து வருகிறார். இவர் உறுப்பு தானம் குறித்த பிரதமர் மோடி அவர்களின் உரையால் கவரப்பட்டு, 2014 ஆம் ஆண்டில் ஆதரவற்ற ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார். மேலும் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இவரது கடிதத்தை படித்த பிரதமர் அவர்கள் பெண்மணி மனோஷிக்கு பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், விலைமதிப்பற்ற ஒரு உயிரைக் காப்பதற்காக உங்கள் சிறுநீரகத்தில் ஒன்றை தானம் செய்த சிறப்பான உங்களது செயல் என் மனதை தொட்டு விட்டது எனவும், தன்னலமற்ற உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இரக்கம் மற்றும் தியாகத்தின் நற்பண்புகள் எப்போதும் நமது கலாச்சாரம் மற்றும் மரபுகளின் மையமாக உள்ளது எனவும் பாராட்டியுள்ளார். மேலும், கருணை மிகுந்த உங்களது செயல் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது எனவும், உறுப்பு தானத்தை முன்னெடுத்துச் செல்ல பலருக்கு உங்களது செயல் ஊக்கமாக அமையும் எனவும் பிரதமர் பாராட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்