கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரைப் பாதிரியார் ஃப்ராங்கோ முலக்கால் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டு எழுந்ததும் பாதிரியார் , தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தது. மேலும் ஃப்ராங்கோ முலக்கலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டங்கள் நடைபெற்றது. ஃப்ராங்கோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, வாடிகன் நகரில் இருக்கும் போப், பிராங்கோ முலக்காலை ஜலந்தர் டியோஸிஸ் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை அறிவித்தது.
பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிஷப் ஃப்ராங்கோ முல்லக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.பல முறை இவர் ஜாமீனுக்கு முயற்சித்து வந்த நிலையில் பிஷப் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் கேரள உயர்நீதிமன்றம் கேரளாவிற்குள் வரக் கூடாது , பாஸ்போடை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…