மகாராஷ்டிராவில் 3 ஆண்களை திருமணம் செய்து தப்பி ஓடிய பெண் கைது.!
மகாராஷ்டிராவில் வேலையின்றி வருமானமின்றி தவித்ததால் திருமண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அவுரங்காபாத்தை சேர்ந்த 27 வயது பெண் மகாராஷ்டிராவில் திருமணம் என்ற பெயரில் பல ஆண்களை ஏமாற்றியதை அடுத்து சனிக்கிழமையன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அதில் ஏமாறிய ஒருவரான யோகேஷ் ஷிர்ஷாத் என்பவர் அளித்த புகாரின் பேரில் இச்சம்பவம் வெளிக்கு வந்தது .கொரோனா காரணமாக வேலையிழந்த பெண்ணான விஜயா அம்ருத் நிதி நெருக்கடியின் காரணமாக திருமண மோசடியில் இறங்கியதாகவும், கடந்த மூன்று மாதங்களில் மூன்று பேரை திருமணம் செய்துள்ளதாகவும்,திருமணமான சில நாட்களில் விலைமதிப்புள்ள பொருட்களுடன் தப்பித்து ஓடி விடுவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதில் முதலில் லோகேஷ் அவர்களை மணந்த அம்ருத் அடுத்த 15 நாட்களில் அவரிடமிருந்து ஆபரணங்களை எடுத்து கொண்டு தப்பியுள்ளார்.அதனையடுத்து ரோகாட்டின் கர்ஜாட்டில் வசிக்கும் சந்தீப் தாரடே என்பவரையும்,அதன் பிறகு மேற்கு மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவரையும் ஏமாற்றியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.இதில் லோகேஷ் தனது மனைவியை காணவில்லை என தேடிய போது தான்,பெண் பலரையும் ஏமாற்றுவது தெரிய வந்ததாகவும், அதனையடுத்து புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.