காஷ்மீரை சேர்ந்தவள் என்பதால் பயங்கரவாதி என அழைப்பதாக பெண் குற்றசாட்டு!
காஷ்மீரை சேர்ந்தவள் என்பதால் பயங்கரவாதி என அழைப்பதாக பெண் குற்றசாட்டு கொடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்த பெண் டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் அந்த பெண்ணை பயங்கரவாதி என அழைப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் ஒரு ஆணுடன் வீட்டுக்குள் நுழைந்த வீடு உரிமையாளர் பெண், தன்னை பயங்கரவாதி என அழைத்ததால் தான் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் நேற்று வெளியில் சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கும் பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதற்கு வீட்டு உரிமையாளர் தான் காரணம் எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காஷ்மீரை சேர்ந்தவர் என்பதால் பயங்கரவாதிகள் எனவும் அவர் போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். மேலும் டெல்லி பெண்கள் ஆணையம் இது குறித்து விளக்கம் கேட்டு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.