விவசாய சட்டங்களை திரும்பப்பெறுவதே விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு – ப. சிதம்பரம்
ஆறு மாதங்களாக விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதே என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பிரதமர் மோடி பதவி ஏற்று 7 ஆண்டுகள் முடிவடைகிறது. அதனால் இந்நாளை கருப்பு தினமாக நாடு முழுவதும் இருக்கக்கூடிய விவசாயிகள் கடைபிடித்தனர்.
இந்த விவசாய போராட்டத்தை குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, விவசாயிகளின் ஆறு மாத போராட்டத்தை நிறுத்த சொல்லும் மத்திய அரசு ஏன் அந்த பொல்லாத 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற மறுக்கிறது? அரசு தான் இந்த வினையை விதைத்தது. வினை தானே விளையும்? அதனால், இந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே இந்த விவசாயப்பிரச்சனைக்கு தீர்வு என்று முன்னாள் மத்திய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
விவசாயச் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் இன்று 6 மாதங்கள் நிறைவு
விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிப் கொள்ள வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, தான் நிறைவேற்றிய பொல்லாத சட்டங்களை விலக்கிக் கொள்கிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறது?
— P. Chidambaram (@PChidambaram_IN) May 26, 2021
அரசு வினை விதைத்தது. வினை தானே விளையும்?
மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி
— P. Chidambaram (@PChidambaram_IN) May 26, 2021