மிஷன் சக்தி சோதனையால் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பெருமை !எந்தெந்த நாடுகள் இதுவரை இந்த ஏவுகணைகளை வைத்துள்ளது
மிஷன் சக்தி சோதனையால் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பெருமை கிடைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்ததாக தெரிவித்தார்.
அமெரிக்கா, ரஷியா,சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது.விண்வெளிதுறையில் இந்தியா 4வதுநாடாக இந்தியா உருவெடுத்த உள்ளது.
இந்தியாவின் செயற்கை கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல என்று அவரது உரையில் தெளிவாக தெரிவித்தார்.
மிஷன் சக்தி:
இந்தியா ஆண்டி சேட்டிலைட் வெப்பன்ஸ் (Anti-satellite weapons) என்ற தயாரித்து வந்தது.இதை சுருக்கமாக அசாட் (ASAT) என்றும் அழைக்கலாம்.
இந்தியாவில் தயாரிக்கும் இந்த ஏவுகணைக்கு மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.மிஷன் சக்தி என்ற ஏவுகணை நேரடியாக வெறும் 3 நிமிடத்தில் தன்னுடைய இலக்கை தாக்கி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு Defence Research and Development Organisation)(DRDO)அமைப்பின் பாலிஸ்டிக் ரக பாதுகாப்பு ஏவுகணை பயன்படுத்தி செயற்கைக்கோள் தாக்கப்பட்டுள்ளது
இதனால் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பெருமை கிடைத்துள்ளது.அதாவது இந்த வகை ஏவுகணைகளை வைத்திருக்கும் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இதுவரை இந்த ஏவுகணைகளை வைத்துள்ள நாடுகள்:
ஆனால் முதன் முதலாக இவ்வகை ஏவுகணையை தயாரித்தது அமெரிக்கா தான். சரியாக 1958-ஆம் ஆண்டு இந்த ஏவுகணையை தயாரித்தது அமெரிக்கா.
இதன்பின்னர் 1964-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் இந்த சோதனை முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியடைந்தது.
அதேபோல் சீனா 2007 ஆம் ஆண்டு இந்த சோதனையில் வெற்றிபெற்றது.ரஷ்யா பி.எல்.-19 நியூடோ என்ற ஏவுகணையை 2015 -ஆம் ஆண்டு சோதனை செய்து வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.