10 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது.! பிஎஸ்எல்வியின் 50-வது ராக்கெட்..!

Published by
பாலா கலியமூர்த்தி
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரிசாட்-2பி ஆர்1- என்ற அதி நவீன ரேடார் செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.
  • விவசாயம் பேரிடர், மேலாண்மை போன்ற பணிகளுக்கு உதவியாக இருக்கும்.

ரேடார் செயற்கைக் கோளான ரிசாட்-2பி ‘ஆர்1’ பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் இன்று மதியம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான 22.45 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரிசாட்-2பி ஆர்1- என்ற அதி நவீன ரேடார் செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள் பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் மையத்தின் மூலம் ஏவுதளத்தில் இருந்து இன்று டிசம்பர்-11 மதியம் 3.25 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

ராக்கெட் ஏவுதலுக்கான 22.45 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது. எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர். ரிசாட் செயற்கைக்கோள் 628 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இது பூவிலிருந்து சுமார் 576 கிலோ மீட்டர் உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படவுள்ளது. ரிசாட் முழுவதும் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் விவசாயம் பேரிடர், மேலாண்மை போன்ற பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதனுடன் வெளிநாடுகளுக்கு சொந்தமான 9 சிறிய வகை செயற்கை கோள்களும் வணிக ரீதியாக ஏவப்பட உள்ளன. இது பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளின் 50-வது திட்டமாகும். அதனால் இதன் வெற்றியை பெரிதும் எதிர்நோக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரோஹித் சர்மாக்குவுக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் கேப்டன்! முகமது கைஃப் பேச்சு!

ரோஹித் சர்மாக்குவுக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் கேப்டன்! முகமது கைஃப் பேச்சு!

மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…

29 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்? மாகாண பிரதிநிதிகள், மக்கள் வாக்குகள், முக்கிய விவரம் இதோ..,

நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…

1 hour ago

குறைந்தது தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!

சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…

1 hour ago

ரொம்ப பிடிச்சிருக்கு! அமரன் பார்த்துவிட்டு சூர்யா போட்ட பதிவு!

சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…

2 hours ago

கூட்டணி குறித்து விளக்கமளித்த திருமாவளவன் முதல் கோவை வந்திறங்கிய முதல்வர் வரை!

சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…

2 hours ago

USElection2024 : அமெரிக்கா தேர்தலில் வெற்றியாளாரை தேர்வு செய்த நீர்யானை!

அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…

2 hours ago