10 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது.! பிஎஸ்எல்வியின் 50-வது ராக்கெட்..!
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரிசாட்-2பி ஆர்1- என்ற அதி நவீன ரேடார் செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.
- விவசாயம் பேரிடர், மேலாண்மை போன்ற பணிகளுக்கு உதவியாக இருக்கும்.
ரேடார் செயற்கைக் கோளான ரிசாட்-2பி ‘ஆர்1’ பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் இன்று மதியம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான 22.45 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரிசாட்-2பி ஆர்1- என்ற அதி நவீன ரேடார் செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள் பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் மையத்தின் மூலம் ஏவுதளத்தில் இருந்து இன்று டிசம்பர்-11 மதியம் 3.25 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ராக்கெட் ஏவுதலுக்கான 22.45 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது. எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர். ரிசாட் செயற்கைக்கோள் 628 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
இது பூவிலிருந்து சுமார் 576 கிலோ மீட்டர் உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படவுள்ளது. ரிசாட் முழுவதும் புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் விவசாயம் பேரிடர், மேலாண்மை போன்ற பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதனுடன் வெளிநாடுகளுக்கு சொந்தமான 9 சிறிய வகை செயற்கை கோள்களும் வணிக ரீதியாக ஏவப்பட உள்ளன. இது பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளின் 50-வது திட்டமாகும். அதனால் இதன் வெற்றியை பெரிதும் எதிர்நோக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.