விஸ்ட்ரான் நிறுவனம் சூறை.. 7,000 பேர் மீது வழக்குப் பதிவு…!
விஸ்ட்ரான் ஐபோன் உற்பத்தி நிறுவனத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 5,000 ஒப்பந்தத் ஊழியர்கள் உட்பட மொத்தம் 7,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கர்நாடகாவின் கோலாரில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் கடந்த டிசம்பர் 12 ம் தேதி பெங்களூரிலிருந்து 51 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தைவானின் தலைமையிடமான விஸ்ட்ரான் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நுழைந்து அடித்து நொறுக்கினர். இதனால், ஆயிரக்கணக்கான ஐபோன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற உற்பத்தி இயந்திரங்கள் சூறையாடப்பட்டன.
இதைத்தொடர்ந்து, நேற்று வன்முறை தொடர்பாக 5,000 ஒப்பந்தத் ஊழியர்கள் உட்பட மொத்தம் 7,000 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.