அதானி விவகாரம்., வயநாடு விவகாரம்., ஆரம்பிக்கும் முன்னரே ஆட்டத்துக்கு தயாரான எதிர்க்கட்சிகள்!

அதானி விவகாரம், வக்பு வாரிய சட்ட மசோதா விவகாரம், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

Parliament winter session

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டமசோதா , மணிப்பூர் விவகாரம், உத்திர பிரதேச மசூதி விவகாரம் உள்ளிட்டவை பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டம், ரயில்வே துறை திருத்த சட்டம், வங்கி புதிய சட்டதிட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை நிறைவேற்றும் முனைப்பில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது

அதே போல எதிர்க்கட்சி எம்பிகளும், பல்வேறு விவகாரங்கள் குறித்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளார். அதில்,  அதானி விவகாரம் குறித்து விவாதிக்கவும், இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மௌனம் காத்து வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரியும் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி கேட்டுள்ளார். அடுத்து, ஹைதிராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி, உத்திர பிரதேச மாநிலம் சம்பலில் மசூதி கணக்கெடுப்பு விவகாரத்தில் நேற்று போலீசார் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தது குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், சிபிஎம் மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ்,  கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு நிவாரண தொகை அளிக்க வேண்டும் என ஸீரோ ஹவர் நோட்டீஸ் அளித்துள்ளார். இதுபோக, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்