நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு என அறிவிப்பு.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் முடங்கியது. இன்று காலை மக்களவை தொடங்கியதில் இருந்து லக்கிம்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், காலை முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பிற்பகல் கூட்டம் தொடங்கியபோது அவைத் தலைவரின் இருக்கையின் முன்பு நின்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…