தொடங்கியது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் …!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்பொழுது தொடங்கியுள்ளது, முதல் நாளான இன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடக்க உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி நடக்க உள்ள இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அவர்கள் அறிவித்துள்ளார்.
அதன்படி கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று மக்களவையில் வேளாண் சட்ட ரத்து மசோதா உள்ளிட்ட 36 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.