மீண்டும் வரதட்சணை கொடுமையா…? கர்நாடகாவில் வெளிநாட்டு பெண் அளித்த புகார்!

Default Image
  • ரஷ்யாவை சேர்ந்த ஜூலியாவை வரதட்சனை கேட்டு கணவர் கொடுமை படுத்தியதாக புகார் அளித்துள்ளார்.
  • தனது இரு குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு துல்லியமாக விசாரணை செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரை சேர்ந்தவர் பிரபாகர் ஷெட்டி ஆவார்.இவர் ரஷ்யாவை சேர்ந்த ஜூலியா என்ற பெண்ணை 1999-ம் ஆண்டு மும்பையில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் இருவரும் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.இந்நிலையில் தற்போது இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளன.எனினும் திருமணம் ஆகிய நாளில் இருந்து இருவருக்கும் இடையில் சிறுசிறு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் பிரபாகர் ஷெட்டி அடிக்கடி வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இவ்வாறு உடல் ரீதியாகவும் உள்ளம் ரீதியாகவும் சித்ரவதைக்கு ஆளான ஜூலியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் அவர் தமது இரு குழந்தைகளின் நலனை கருதி இந்த புகாரை துல்லியமாக விசாரிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்