சபரிமலை வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது
கடந்த ஆண்டு இந்திய இளைஞர் சங்கம் சார்பில் சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.இந்த விசாரணையில் ஏன் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையக் கூடாது? இந்து மதத்தில் தடை ஏதும் உள்ளதா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.பின் சபரிமலை தேவசம் போர்டு தரப்பில் சபரிமலை கோயிலின் ஆகம விதிகளின்படியே மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.மேலும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தது.உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது.
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…