கேரளாவில் கண்டுபிடித்த அரியவகை பர்ப்பிள் தவளையை மாநிலத்தவளையாக அறிவிக்க கேரள வனத்துறை, மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
அபூர்வ தவளை இனமான பன்றி மூக்கு தவளையை முதலில் 2003 ஆம் ஆண்டு டெல்லி பேராசிரியர் பிஜு இடுக்கியில் கண்டுபிடித்தார். இந்த தவளை குறித்து வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ் 2017 ஆம் ஆண்டு எடுத்த ஆராய்ச்சிக்காக லண்டன் பவுண்டஷன் விருது வழங்கி உள்ளது.
வாழ்நாள் முழுவதும் பூமிக்குள் வாழும் அபூர்வ தவளை இனமான பன்றி மூக்கு தவளை இனம், மழைக்காலங்களில் மட்டுமே இனப்பெருக்கத்திற்காக பூமிக்கு மேலே வரும். இனப்பெருக்கம் முடிந்தவுடன் மீண்டும் பூமிக்குள் சென்றுவிடும். இந்த பர்ப்பிள் தவளை பார்ப்பதற்கு உடல் பெரியதாகவும், கால்கள், தலை, வாய் ஆகியவை சிறிய அளவிலும் இருக்கும். இதன் எடை 170 கிராம் என்றும், 6 முதல் 9 செ.மீ. நீளமும் உடையது.
இது பூமிக்கு கீழே உள்ள மண்புழுக்களை அதன் நாக்கால் கவர்ந்திழுத்து உண்ணும். மர்மம் நிறைந்த இதன் வாழ்க்கை முறை இன்னும் முழுமையாக தெரிந்துகொள்ளமுடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தவளையை அழிந்து வரும் இனங்கள் பட்டியலில் இண்டர்நேஷனல் யூனியன் கன்சர்வேஷன் ஆப் நேச்சர் சேர்த்துள்ளது.
மருத்துவ குணம் நிறைந்த இந்த பன்றி மூக்கு தவளையை பலரும் வேட்டையாடுகின்றனர். மேலும், கேரளாவில் பெரியாறு புலிகள் சரணாலயம், ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் இது காணப்பட்டுள்ளது. அதனால், இந்த அபூர்வ இனத்தை பாதுகாக்க கேரள வனத்துறை மாநில அரசுக்கு இந்த பரப்பிள் தவளையை மாநில தவளையாக அறிவிக்க பரிந்துரைத்துள்ளது.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…