பிரதமர் மோடி எங்கள் பிரச்சனையை கேட்பாரா? – மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்
இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக கட்சியின் எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர். ஆனால், பிரிஜ் பூஷன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யத் டெல்லி காவல்துறை தவறியது.
இதனையடுத்து, டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. வழக்கு பதிவு செய்யாததால் கடந்த ஜனவரி மாதம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர்.
சமீபத்தில், செய்தியாளர்களிடம் பேசிய வீராங்கனை சாக்ஷி மாலிக், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றபோது பிரதமர் மோடி எங்களை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்து, மகள்கள் என அழைத்தார். இப்போது எங்கள்பிரச்னையை கேட்பாரா? நாங்கள் அவரை சந்தித்து எங்கள் பிரச்னையை முறையிட வேண்டும்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பிரதமர் மோடியிடம் வீராங்கனை சாக்ஷி மாலிக் கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று வழக்கு விசாரணை:
இதற்கிடையில், மல்யுத்த வீராங்கனைகள் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜகவை சேர்ந்தவருமான பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வீராங்கனைகள் மனு தொடர்ந்திருந்த நிலையில். இதற்கு பதிலளிக்க டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ளது.