மீண்டும் சலுகை அறிவிப்பு வெளியாகுமா.? செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.!
இந்தியா தற்போது கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவுதலை தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்குஅதாவது கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் மத்திய அரசு 14 நாட்களுக்கு அதாவது மே 03-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அன்றாட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் .அப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதில் பொதுமக்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான 3 மாத தவணைகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூலிக்க வேண்டாம் என அறிவித்தார்.
இதையெடுத்து இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இன்று சில முக்கிய சலுகைகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.