தற்போது அதிகமாக பரவி வரும் H3N2 வைரஸ் காய்ச்சல், அடுத்த கோவிட் ஆக மாறுமா என்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்…
பாதிப்பை ஏற்படுத்துமா H3N2?: H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இது அடுத்த கொரோனா தொற்றாக உருவெடுக்குமா என்று மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சமீபத்திய H3N2 வைரஸ் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் மக்களைப் பாதிக்கிறது, இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் மருத்துவர்கள் பல்வேறு வழிகளில் முறையான அணுகுமுறைகளை தெரிவிப்பதன்மூலம் பொதுமக்களுக்கு தேவையான உறுதி அளித்துவருகின்றனர். இது குறித்து டெல்லி மருத்துவர் டிரேன் குப்தா, கூறுகையில் கடந்த முறை கொரோனா தொற்றின் போது ஏற்பட்ட லாக்டௌன் தற்போது இல்லாததால் இந்த புதிய வைரஸின் தோற்று குழந்தைகளை அதிக அளவில் பாதித்து வருகிறது.
அச்சம் தேவையில்லை: மற்றொரு மருத்துவரான டெல்லியைச்சேர்ந்த சுவாசவியல் நிபுணர் எஸ்.கே. சாப்ரா கூற்றுப்படி, COVID-19 க்கும் புதிய வைரஸ் காய்ச்சலுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை, இரண்டும் சுவாச நோய்த்தொற்றுகள் என்பதால் ஒரே மாதிரியாக பரவுகின்றன. கோவிட்-19இன் லேசான அறிகுறிகள், H3N2 வைரஸ் காய்ச்சலின் லேசான அறிகுறிகளைப் போன்றே இருக்கின்றன, தவிர வைரஸ் காய்ச்சலுக்கு சளி, உடல்வலி மற்றும் தலைவலி போன்றவை ஏற்படுகின்றன.
வைரஸ் பரவல்: மேலும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த புதியவகை வைரஸால் பாதிக்கப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார். COVID-19 மற்றும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இரண்டையும் ஒப்பிடும்போது இரண்டும் சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் ஒரே மாதிரியான முறையின் மூலம் பரவுகின்றன.
ஆனால் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்த H3N2 வைரஸ் அதிக ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸிற்கு இதுவரை 3038 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியானா மற்றும் கர்நாடகாவில் சேர்த்து 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பருவகால காய்ச்சல்: சமீபகாலமாக பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் பொதுவாக ஜனவரி முதல் மார்ச் வரையிலும், மழைக்காலத்திற்குப் பிறகும் தோன்றும் பருவகால காய்ச்சல், மார்ச் மாதத்திற்குப் பிறகு குறையும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றைத் தவிர்க்க, மக்கள் கோவிட் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், நல்ல சுகாதார நடைமுறைகளைப் பராமரிக்கவும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…